நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசிய போது முரசொலி குறித்தும் பெரியார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது. முரசொலி குறித்து ரஜினிகாந்த் பேசியது திமுக தலைமையை பெரும் அதிருப்திக்கு ஆளாக்கியது என்றும், ஆனால் இதனை நேரடியாக எதிர்க்காமல் திகவினர்களை தூண்டி விட்டத்ததாகவும் கூறப்படுகிறது
தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் முன்னணி வார இதழ் ஒன்றில் இது குறித்து ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அந்த கட்டுரையில் முரசொலி குறித்து பேசிய ரஜினிக்கு பாடம் புகட்ட திகவினர்களை திமுகவினர் தூண்டிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரஜினி பேசியதற்கு காவல் நிலையங்களில் வழக்கு தொடுக்கவும், ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தவும் திமுக பணம் கொடுத்ததாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது
திமுகவில் உள்ள வாரிசு தலைவர் ஒருவரும் முன்னாள் அமைச்சர் ஒருவரும் இதற்கு பின்புலமாக இருந்தனர் என்றும் தற்போது திகவினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு பின்னணியில் இவர்கள் இருவர்தான் காரணம் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினியுடன் நேரடியாக மோதாமல் திகவினர்களை வைத்து மறைமுகமாக திமுக மோதி வருவதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது திமுகவினர் விளக்கம் அளித்தால் மட்டுமே தெரிய வரும்
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…