நான் சினிமாவை விட்டு விட்டேனா?… கமலின் அடுத்த அவதாரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

Published on: February 4, 2020
---Advertisement---

bfd6119f264456fca68113ac71327218

கமல் அரசியல் கட்சி ஆரம்பித்த சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார் எனக் கூறப்பட்ட நிலையில் ஸ்ட்ரீமிங் இணையதளங்களிலும் கால்பதிக்க ஆரம்பித்துள்ளார்.

சினிமாவைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருபவர் கமல்ஹாசன். இப்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து இருக்கும் நிலையில்  அவர் நடித்து வரும் இந்தியன் 2 மற்றும் தலைவன் இருக்கிறான் ஆகிய இரு படங்களில் மட்டுமே அவர் நடிப்பார் என சொல்லபட்டு வந்தது. அதன் பின் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப்போகிறார் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது கமல் சினிமாவில் வேறு ரூபங்களில் இருக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது ராஜ்கமல் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வரும் அவர் அடுத்ததாக ஸ்ட்ரீமிங் இணையதளங்களில் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க இருக்கிறார். இது சம்மந்தமாக பன்னாட்டு நிறுவனம் ஒன்றுடன் அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். இதை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Leave a Comment