More

குடியுரிமை சட்டம் குறித்து கருத்துக் கூற மறுத்தாரா ரஜினிகாந்த்?

சமீபத்தில் மும்பையில் ’தர்பார்’ படத்தின் டிரைலர் விழா நடைபெற்றபோது ரஜினிகாந்திடம் குடியுரிமை சட்டம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய ரஜினிகாந்த் ’இந்த மேடையில் அதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை என்றும், தர்பார் திரைப்படம் குறித்த கேள்விகளை கேளுங்கள் என்றும், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இந்த கேள்விக்கு பதில் கூறுவதாகவும் தெரிவித்தார் 

Advertising
Advertising

ஆனால் வழக்கம்போல் ரஜினியின் இந்த பதில் திரித்து வைரலாக்கப்பட்டன. ஊடகங்களும் ஒரு சில அரசியல்வாதிகளும் குடியுரிமை சட்டம் குறித்து ரஜினிகாந்த் பதில் கூற மறுத்து விட்டதாக கூறி வருகின்றனர். ரஜினிகாந்த் ஒருவேளை கருத்து கூறியிருந்தாலும் மாணவர்கள் போராட்டத்தில் சமூகவிரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்றும் அதனால்தான் அந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது கூறியிருப்பார் என்று ஒரு முன்னணி அரசியல் கட்சியின் பிரமுகர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் நெட்டிசன்கள், ‘குடியுரிமை சட்டம் குறித்து ரஜினிகாந்த் தனது கருத்தை கூறி இருந்தால் அந்தக் கருத்தை விமர்சனம் செய்வதில் தவறில்லை என்றும், ஆனால் எந்தவித கருத்தையும் கூறாத ஒருவரை இந்தக் கருத்தைத்தான் அவர் தெரிவித்திருப்பார் என யூகித்து விமர்சனம் செய்வது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் என்ன கூறினாலும் அதனை ஒருசில மீடியாக்களும், ஒருசில அரசியல்வாதிகளும் சர்ச்சையாக்கி வருவது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வருகிறது. அதே தான் குடியுரிமை விஷயத்திலும் நடப்பதாக டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts