வலிமை படத்தில் இணைந்த உச்சநடிகர் – தலயே ரெகமண்ட் பண்ணினாரா?

வலிமை படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபுவை நடிகர் அஜித் பரிந்துரை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் அஜித் இப்போது ஹெச் வினோத் இயக்கும் வலிமைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடிப்பதால் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வர முக்கியமானக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த கதாபாத்திரத்துக்கு யோகி பாபுவை அஜித்தே பரிந்துரை செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

யோகி பாபு அஜித்துடன் வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து. சமீபத்தில் திருமணம் முடித்துள்ள யோகி பாபு தமிழ்  சினிமாவின் நம்பர் ஒன் காமெடியனாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram