சிலரை ஜெயிலுக்கு அனுப்பும் வேலையில் இருக்கிறேன் ! சுப்பிரமணிய சுவாமி அதிரடி!

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமண்ய சுவாமி சோனியா காந்தி உள்ளிட்டவர்களை சிறையில் அனுப்பும் வேலையில் இருப்பதாக சொல்லியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி பேட்டி கொடுத்தார் என்றால் சர்ச்சைகளுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. நிதியமைச்சருக்கும் பிரதமருக்கும் பொருளாதாரம் தெரியாது என்று அவர் சொல்லிய நிலையில் பட்ஜெட் தாக்கலைப் பற்றி அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் ‘பட்ஜெட்டைப் படித்து விட்டீர்களா? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?’ கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர் ‘நான் இப்போது சோனியா காந்தி மற்றும் சிதம்பரம் உள்ளிட்டவர்களை சிறைக்கு அனுப்பும் வேலையில் இருக்கிறேன். அதனால் பட்ஜெட்டை படிக்கவில்லை. படித்ததும் அதை பற்றி கூறுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். சுப்ரமண்ய சுவாமியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram