ஒரு சந்தானமே காமெடி அள்ளும்.. மூணு சந்தானமா?.. டிக்கிலோனா புது டிரெய்லர் வீடியோ
பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர். திடீரென ஹீரோவாக மட்டும் நடிப்பேன் எனக்கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். கடந்த சில வருடங்களாகவே அவர் கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். ஆனால், அவர் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் மட்டுமே கல்லா கட்டியது. மற்ற படங்கள் பெரிதாக ஓடவில்லை. ஆனாலும், தனது ஹீரோ கொள்கையை சந்தானம் தளர்த்திக் கொள்ளவில்லை.
இந்நிலையில், கார்த்திக் யோகி என்பவரின் இயக்கத்தில் அவர் ‘டிக்கிலோனா’ என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் Time machine கால எந்திரம் பற்றிய கதையுடன் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தானம், யோகிபாபு, ஹர்பஜன் சிங், மொட்டை ராஜேந்திரன், அனாகா, ஷெரின் காஞ்ச்வாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்துள்ளார்.
இப்படம் செப்டம்பர் 10ம் தேதி ஜீ5(Zee5) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தியேட்டர் மூடிக்கிடப்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், தற்போது 2வது டிரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.