ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.. ‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழாவுடன் மற்றுமொரு நிகழ்வு
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் வணங்கான். இதுவரை இல்லாத அளவில் அருண் விஜய் வணங்கான் திரைப்படத்தில் சற்றும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.. இவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார்.
மேலும் இவர்களுடன் இணைந்து சமுத்திரக்கனி, மிஸ்கின் என பல முக்கிய கதாபாத்திரங்களும் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்றது .
அது மட்டுமல்ல படத்திற்கு யுஏ சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பற்றிய ஒரு தகவல் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது .வரும் டிசம்பர் 18ஆம் தேதி இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .
இந்த விழாவுடன் பாலாவின் 25 ஆண்டு கால சினிமா பயணமும் நிறைவடைகிறதாம். அதையும் சேர்த்து இந்த விழாவில் கொண்டாட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல படம் ஜனவரி பத்தாம் தேதி பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக உள்ளது .ஏற்கனவே பொங்கல் ரிலீஸ் ஆக விடாமுயற்சி திரைப்படம் ,கேம் சேஞ்சர் திரைப்படம் என பெரிய பெரிய திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்க பாலா எதற்கும் அஞ்சாமல் துணிந்து வணங்கான் திரைப்படத்தை அதே பொங்கல் ரிலீஸில் வெளியாக வேண்டும் என உறுதியாக இருக்கிறார் .
ஏற்கனவே சூர்யா நடிக்க இருந்த திரைப்படம் தான் வணங்கான். ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார் .அதன் பிறகு தான் அருண் விஜய் இந்த படத்தில் கமிட்டானார். அதனால் சூர்யாவின் கதாபாத்திரத்தை அருண் விஜய்க்கு ஏற்ப எப்படி மாற்றி அமைத்திருக்கிறார் பாலா மற்றும் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் எந்த அளவு நடிப்பை இந்த படத்திற்காக போட்டிருக்கிறார் என்பதையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.