Cinema History
என்னது விக்ரமோட அந்தப் படத்துல அஜீத் நடிக்க வேண்டியதா? அடக்கடவுளே… நல்ல வேளை ‘தல’ தப்பிச்சாரு…!
பாலாவின் முதல் படமான சேது எப்படி உருவானது என்று இயக்குனர் அமீர் சுவாரசியமாக பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…
முதல் படத்தைத் துவங்கும்போது ரொம்ப பதட்டத்தோடயே இருந்தோம். ரொம்ப பழைய கதையா இருந்தாலும் இங்கே நிறைய புதியவர்கள் இருக்கறதால அந்தக் கதை புதுசா இருக்கும்னு நான் நம்புறேன்னாரு பாலா. 88, 89 காலகட்டத்தில் நானும் அவரும் தான் சென்னைக்கு ஒண்ணா வந்தோம். அப்புறம் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனரா சேர்ந்தார். 93ல முதல் படத்துக்கு பூஜை நடந்தது. பாலா இயக்குனரா அறிமுகம் ஆனாரு.
அந்தப் படத்துக்குப் பேரு வந்து அகிலன். இந்திய சினிமா வரலாற்றிலேயே அப்படி ஒரு வரலாறு அந்தப் படத்துக்கு இருக்கு. காலையில பூஜை. மாலையில் டிராப். அதுக்கு அப்புறம் இந்தப் படத்தை பல நாயகர்களும் நடிக்க மறுத்துட்டாங்க. பாலா என்பவர் யாருன்னா பாலுமகேந்திரா என்ற மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட பழம். அது அன்னைக்கு விதைக்கப்பட்டது.
ஆனா முளைக்கல. அப்படி நின்னு போச்சு. கிட்டத்தட்ட பட்டுப் போச்சுன்னு சொல்லலாம். ரஜினி, கமல் தவிர எல்லா நடிகர்களும் அந்தக் கதைக்குள்ள வந்துட்டு போயிருக்காங்க. அல்டிமேட் ஸ்டார் கூட இந்தப் படத்துல கமிட்டாகி பண்ணாம போனவரு தான்.
அப்புறம் 93ல சசிக்குமாரின் உறவினர் கந்தசாமி என்ற தயாரிப்பாளரின் மூலம் அந்தப் படம் துவங்கப்பட்டது. அகிலன் என்ற அந்தப் படத்துக்கு சேது என்று பெயர் மாற்றியாச்சு. காலையில பூஜை போட்டோம். படைப்பாளிகள் ஸ்டிரைக் பண்ணிட்டாங்க. விக்ரம் என்ற நாயகன் உள்ளே வர்றாரு. அவரு 12 வருடமாக திரையுலகில் போராடிக்கிட்டு வர்றாங்க.
அபர்ணா ஹீரோயின். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு அந்தப் படம் துவங்கப்பட்டது. குறிப்பிட்ட பட்ஜெட்ல முடிக்க முடியாமல் 2000ல் தான் முடிவுக்கு வந்தது. அந்தப் படத்தை யாரும் வாங்க முன்வரல. படம் நல்லா இருந்தது. ஒரு இயக்குனர் தனது கனவுகளை ஒட்டுமொத்த உழைப்பாகவும் போட்டு படத்துக்குள்ள வச்சிருக்காரு. இது அவருக்காக மட்டுமல்ல.
ஒரு தலைமுறையை உருவாக்குவதற்குத் தான். பாலுமகேந்திரா என்ற மரத்தில் இருந்து அந்தப் பழத்தை எடுத்து 2வது முறையாக விதைக்கப்பட்டது தான் சேது. அங்கிருந்து தான் அமீர் வந்தாரு. சூர்யா, விக்ரம் வந்தாரு. சூர்யா தான் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்துறாரு. அமீர் வரும்போது சசிக்குமார் வருகிறார்.
சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு, புதுப்புது தயாரிப்பாளர்கள்னு இப்படி புதுப்புது நடிகர்கள் வர்றாங்க. அப்போ எங்களுக்கு இருந்த நம்பிக்கை படம் நல்லாருக்கு. ஆனா விற்பனையாகல. கடைசியா படத்துக்கு 6 பிரிண்ட் எடுத்து ரிலீஸ் பண்ணினோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சேது படம் அதன்பிறகு கதை சூப்பராக இருந்தால் படம் நல்ல பிக்கப் ஆகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குனர் பாலாவும், நடிகர் விக்ரமும் வெளியே தெரிய ஆரம்பித்தார்கள். இந்தப் படத்தில் அஜீத் நடிக்காமல் இருந்தது கூட நல்லது தான். ஏன்னா அவருக்கு அந்த கெட்டப் செட்டாகாது. அதை ரசிகர்களும் விரும்ப மாட்டாங்க.