விஜயகாந்த் படத்தால 70 லட்ச ரூபாய் போச்சு... ஃபீல் பண்ணும் இயக்குனர்

by ராம் சுதன் |

இயக்குனர் பாரதிகண்ணன் நெல்லையைச் சேர்ந்தவர். இவர் நெல்லை சுந்தரராஜனிடம் உதவி இயக்குனராக இருந்துள்ளார். நெத்தியடி, ஜாடிக்கேத்த மூடி படங்களில் சிறிய கேரக்டர்களில் தோன்றினார்.

இயக்குனர் கே.சங்கரின் படங்களிலும் பணியாற்றியுள்ளார். பாண்டியன், குணா படங்களுக்கு திருநெல்வேலி ஏரியாவில் இவர் தான் விநியோகஸ்தராக இருந்தாராம். திருநெல்வேலி, கண்ணாத்தாள், ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீபண்ணாரி அம்மன் ஆகிய படங்களை இயக்கினார்.

விஜயகாந்த் படத்தால தன் படம் ஓடாம போச்சு. அதனால தனக்கு 70 லட்ச ரூபா நஷ்டம்னும் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

புதுநெல்லு புதுநாத்து, பணக்காரன், பாண்டியன், நான் புடிச்ச மாப்பிள்ளை, கரகாட்டக்காரன், வால்டர் வெற்றிவேல் இப்படி நிறைய படங்கள் பண்ணி சம்பாதிச்சி டைரக்ட் பண்ணனும் ஆசை. அசிஸ்டண்ட் டைரக்டரா வொர்க் பண்ண முடியாம போச்சு. சரி சொந்தமா படம் எடுத்துடலாம். நாங்க படம் எடுத்த நேரம் பொருளாதாரத்தால் கொஞ்சம் போராட வேண்டியிருந்தது.

அப்போ 'சீவலப்பேரி பாண்டி'ன்னு ஒரு படம் வந்தது. அது ரிலீஸான அடுத்த படமா நம்ம படம் வருது. பொங்கலுக்கு வர்ற மாதிரி வருது. எங்க படத்துக்கு ஆப்போசிட் 'வானத்தைப் போல'.

விஜயகாந்த் படம். இது நாசர். படம் வந்து நான் எதிர்பார்த்த அளவு போகல. முதல் படமே பெரிய நஷ்டம். படமும் போச்சு. பேரும் போச்சு. பணமும் போச்சு. 70 லட்ச ரூபாய் ஒரே படத்துல போச்சு. இவ்வளவு நாள் விநியோகஸ்தரா இருந்து கஷ்டப்பட்டது எல்லாம் போச்சு.

கார், அது இதுன்னு எல்லாம் போச்சு. மறுபடியும் ஜீரோல இருந்து ஆரம்பிக்கணும். அப்போ தான் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சார் பார்த்தாரு. ஏன் உனக்கு இந்த ஆசை... டிஸ்டிரிபியூட்டராவே இருந்துருக்கலாமேன்னு கேட்டாரு. எங்களுக்கு ஒரு ஆசை இருக்கு சார்னு சொல்லவும் தலையை ஆட்டிவிட்டுப் போயிட்டார்.

அப்புறம் பார்க்கும்போது 'எல்லாம் போயிடுச்சா'ங்கறாரு. 'ஆமா'ன்னேன். 'அதான்யா சினிமா. சினிமாங்கறது கானல் நீர். கிட்டப் போய் பார்த்துத் தண்ணீ எல்லாம் கோர முடியாது. எல்லாத்துக்கும் சூட் ஆகாது'ன்னு சொல்றாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1996ல் நாசரை ஹீரோவாகப் போட்டு அருவாவேலு என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். அதுதான் நஷ்டமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story