விஷ்ணு விஷாலுடன் கை கோர்த்த இயக்குனர் கௌதம் மேனன்…

விஷ்ணு விஷால் நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். அதன்பின், இயக்குனர் கௌதம் மேனனின் உதவியாளர் மானு ஆனந்த் இயக்கும் எஃப். ஐ.ஆர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஷ்னு விஷாலே தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 24 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் இயக்குனர் கௌதம் மேனன் நடிக்கவுள்ளார். அவரின் கதாபாத்திரம் படம் முழுக்க வருவது போல் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீவிரவாதம் தொடர்புடைய ஆக்‌ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு அஷ்வத் இசையமைத்து வருகிறார்.

Published by
adminram