Home > 19 வருடங்களுக்கு பின் படம் இயக்கும் ‘இதயம்’ பட இயக்குனர்...
19 வருடங்களுக்கு பின் படம் இயக்கும் ‘இதயம்’ பட இயக்குனர்...
by adminram |
மறைந்த நடிகர் முரளி, ஹீரா, சின்னி ஜெயந்த உள்ளிட்ட பலரும் நடித்து 1991ம் ஆண்டு வெளியாகி இளசுகளின் இதயத்தை உலுக்கிய திரைப்படம் ‘இதயம்’. இப்படத்தை இயக்கியவர் கதிர். தமிழ் சினிமாவில் காதலை உருகி உருகி எடுத்த ஒரு இயக்குனர். காதல் தேசம், காதலர் தினம் ஆகிய படங்களே அதற்கு சாட்சி.
அவர் கடைசியாக இயக்கிய காதல் வைரஸ் திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. அதன்பின் அவர் படம் இயக்கவில்லை. அப்படம் வெளியாகி 19 வருடங்கள் ஆகிவிட்டது.
இந்நிலையில், தற்போது அவர் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் கிஷோர் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
Next Story