அஜீத், ஏ.ஆர்.ரகுமான் ரெண்டுபேருமே அந்த விஷயத்துல ஒண்ணு தான்... இயக்குனர் சொன்ன ரகசியம்

by ராம் சுதன் |

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரைப் பொருத்தவரை அவர் ஒரு ஜனரஞ்சகமான டைரக்டர். தயாரிப்பாளர்களின் இயக்குனர்னு சொல்வாங்க. அதாவது அவர் எடுக்குற படம் எதுவுமே தோல்வியைத் தழுவாது. தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை உண்டாக்காது. ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, சிம்பு என அவர் பல மாஸான நடிகர்களின் படங்களையும் இயக்கியுள்ளார்.

குறிப்பாக சரத்குமாரை வைத்துப் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் அவர் தான். அவரது படங்களைப் பொறுத்த வரை விறுவிறுப்பான திரைக்கதை இருக்கும்.

காமெடி, சென்டிமென்ட், இசை என எல்லாமும் பின்னிப் பெடல் எடுக்கும். அஜீத்தை வைத்து இவர் இயக்கிய வில்லன், வரலாறு என இரு படங்களுமே மாஸ். வரலாறு படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

அதே போல ஏ.ஆர்.ரகுமான் கே.எஸ்.ரவிகுமாருடன் இணைந்து முத்து, படையப்பா, கோச்சடையான், லிங்கா ஆகிய படங்களிலும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

அந்தவகையில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சமீபத்தில் அஜீத்துக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் இடையே உள்ள சில ஒற்றுமைகளைப் பற்றித் தெரிவித்துள்ளார். இருவரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்களாம். தான் என்ன சொல்கிறோமோ அதே போலவே நடந்து கொள்வார்களாம்.

இருவது சிந்தனையும் கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருக்குமாம். படையப்பா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை கே.எஸ்.ரவிகுமார் ஒரு பாட்டுக்காக இசை அமைக்க வரச் சொல்லி இருந்தாராம். அதே நேரம் ஸ்டூடியோவில் லகான் படத்துக்காக அமீர்கானும், பாரதிராஜாவும் காத்திருந்தார்களாம்.

அப்போது கே.எஸ்.ரவிகுமாரைப் பார்த்ததும் 'ஓஹோஹோ கிக்கு ஏறுதே' பாடலைப் பதிவு செய்து கொடுத்தாராம் ரகுமான். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே திடீரென சந்திக்க வந்தவர்களைக் காத்திருக்கச் செய்துள்ளார் ரகுமான். தனது பணி முடிந்ததும் தான் இருவரையும் சந்தித்தாராம். எப்பேர்ப்பட்ட பெருந்தன்மையானவர் என்று இதிலிருந்தே தெரிகிறது.

Next Story