
மணிரத்னம் படங்கள் என்றாலே இருட்டு தான் என்றும் இவரது படத்தில் வசனங்களை உற்று கவனிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வட்டாரம் அவ்வப்போது பேசுவதுண்டு. இது படம் பார்க்கும்போது அனைவருக்கும் புரியும். படத்தில் ஒரு இடம் கும்மிருட்டாகவும், அதேவேளை மற்றொரு இடத்திலிருந்து ஒளிக்கீற்றுகளாய் பிரகாசமாக வெளிவருவதையும் பல படங்களில் காணலாம். இதுவே அவரது படத்தை மேலும் ரசிக்கத் தூண்டுகிறது என்றால் மிகையில்லை.
தமிழ்;த்திரையுலகில் 1980களின் பிற்பகுதியில் பெரும் இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா ஆகியோர் இருந்தனர். இந்த வரிசையில் மணிரத்னமும் சேர்ந்துள்ளார். தனது தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம் ஆகியவற்றை பின்னணியாக கொண்டு நேர்த்தியாக கதை புனைவதில் வல்லவர். இவரது படங்களைப் பார்க்க என ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. கதாநாயகன் யார் என்று கேட்பதில்லை. டைரக்டர் யார் என்;;;;;;;;;று கேட்டு, மணிரத்னமா என்றால் அது யார் நடித்த படமாக இருந்தாலும் திரையரங்கிற்கு சென்று விடுவார்கள். மணிரத்னம் இயக்கிய ஒரு சில படங்களைப் பார்க்கலாம்.
நாயகன்

1987ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம். 1988ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இந்த படம் டைம் வார இதழ் மற்றும் சிஎன்என் – ஐபிஎன் நிறுவனம் சார்பாக உலகின் 100 சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 3 தேசிய விருதுகளையும், பல தனியார் விருதுகளையும் வாங்கிக் குவித்த படம் இது. இது ஒரு பழிக்குப் பழி கதைதான் என்றாலும் கமலின் முதிர்ச்சியான நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவை படத்திற்கு பிளஸ் பாயிண்ட்டுகள். இசைஞானியின் இசையில் நிலா அது வானத்துமேலே, நான் சிரித்தால் தீபாவளி, தென்பாண்டிச்சீமையிலே, நீ ஒரு காதல் சங்கீதம்…, அந்தி மழை மேகம் போன்ற பாடல்கள் மெகா ஹிட். கமல்ஹாசன், சரண்யா, ஜனகராஜ், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்த இப்படம் அன்றைய காலம் தொட்டு இன்று வரை பேசப்படும் மிகச்சிறந்த படங்களுள் ஒன்று. படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் பி.சி.ஸ்ரீராம். 35வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகராக கமல்ஹாசனுக்கும், சிறந்த கலை இயக்கத்திற்காக தோட்டா தரணிக்கும், சிறந்த ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராமுக்கும் கிடைத்தது.
ரோஜா

இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக படத்தில் சித்தரிக்கப்பட்டு உள்ளது என பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படம். 1992ல் வெளியான இப்படம்தான் அரவிந்த்சாமி அறிமுகமான படம். இவருக்கு ஜோடியாக மதுபாலா நடித்தார். உடன் ஜனகராஜ நடித்தார.; படத்தின் இசை ஏ.ஆர்.ரஹ்மான். இதுதான் இவருக்கு முதல் படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். சின்ன சின்ன ஆசை, ருக்குமணி, ருக்குமணி, தமிழா தமிழா, புது வெள்ளை மழை பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில் காஷ்மீரின் அழகை காமிரா அள்ளிய படம். தென்னிந்திய திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதுகள் இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த திரைப்படத்திற்கும் கிடைத்தது. தீவிரவாதிகள் பற்றிய கதை இது.
தளபதி

1991ல் வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி என இருபெரும் சூப்பர்ஸ்டார்கள் இணைந்து கலக்கியுள்ளனர். அவர்களுடன் அரவிந்த்சாமி, ஷோபனா, பானுப்ரியா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை இளையராஜா. ராக்கம்மா கையத்தட்டு, யமுனை ஆற்றிலே, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சின்னத்தாயவள், காட்டுக்குயிலு, புத்தம்புது, மார்கழிதான் ஆகிய பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. படத்தில் ரஜினியும், மம்முட்டியும் மகாபாரதத்தில் வரும் கர்ணா (ரஜினி), அர்ஜூனன் (அரவிந்த்சாமி) துரியோதனன் (மம்முட்டி), போல் நடித்து பட்டையைக் கிளப்பியிருப்பார்கள்.
பம்பாய்

1995ல் வெளியான படம். படத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா, நாசர் உள்பட பலர் நடித்த படம். உண்மைச்சம்பவங்கள் நிறைந்த கற்பனை படம். இந்தி, தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த பாடல்கள் மெகா ஹிட். குச்சி குச்சி ராக்கம்மா பாடலும், அந்த அரபிக்கடலோரம் பாடலும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. கண்ணாளனே….உயிரே….பூவுக்கு என்ன பாடல்களும் ஹிட் தான். இந்து முஸ்லிம் காதல் கதை எதிர்ப்பு இதுதான் கதை. அந்த அரபிக்கடலோரம் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடினார். 1996ல் தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ்க்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருதும் என 2 விருதுகளைப் பெற்றது. 1995ல் சிறந்த நடிப்பிற்கான பிலிம்பேர் விருதை மனிஷா கொய்ராலா பெற்றார்.
;.
அலைபாயுதே

2000ல் வெளியான இப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா, அரவிந்த்சாமி, குஷ்பூ உள்பட பலர் நடித்துள்ளனர். கிராமத்துது; திருமணத்திற்கு செல்கையில் மாதவன், ஷாலினிக்கிடையே காதல் மலர்கிறது. பெற்றோரின் எதிர்ப்புக்கிடையில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் ஷாலினிக்கு விபத்து ஏற்பட இருவரும் சேர்கிறார்கள். இந்த படத்தை கல்லூரி மாணவர்களைக் கவரும் வகையில் வெகு நேர்த்தியாக எடுத்திருப்பார் இயக்குனர் மணிரத்னம். யாரோ…யாரோடி…, சிநேகிதியே… காதல் சடுகுடு….எவனோ ஒருவன், என்றென்றும் புன்னகை, பச்சை நிறமே, செப்டம்பர் மாதம், அலைபாயுதே…பாடல்கள் சூப்பர்.
பொhன்னியின் செல்வன்

கல்கி எழுதிய வரலாற்று சிறப்புமிக்க புதினம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தை எடுக்க பலரும் முன்வராததால், மணிரத்னம் களத்தில் இறங்குகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம். பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஜெய்ராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, நிழல்கள் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இசையை ஏ.ஆர்.ரஹ்மான் கவனிக்க, ஒளிப்பதிவு ரவிவர்மன் பார்த்துக்கொள்கிறார். விரைவில் படத்தின் முதல்பாகம் வெளியாக உள்ளது. 2 பாகங்களாக தயாராகும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.





