இயக்குனர் முருகதாஸே மன்னிப்பு கேள்: பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’தர்பார்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதாக கூறப்பட்டது 

இந்த படம் ஒரே வாரத்தில் ரூபாய் 300 கோடி வசூல் அடைந்ததாக செய்திகள் வெளியான பின்னரும் ஒருசில விநியோகிஸ்தர்கள் இந்த படத்தால் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என்றும் எனவே ரஜினிகாந்த் மற்றும் ஏஆர் முருகதாஸ் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இதனை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் ஏஆர் முருகதாஸை சந்திக்க விநியோகிஸ்தர்கள் முயற்சித்தனர். ஆனால் அதற்கு பலன் இல்லை. இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் வீட்டிற்கு சென்ற விநியோகிஸ்தர்களை காவல்துறையினர் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஏஆர் முருகதாசுக்கு கண்டனம் தெரிவித்து விநியோகஸ்தர் தரப்பில் இருந்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ’தர்பார்’ திரைப்படத்தால் பல கோடி நஷ்டம் அடைந்து நீதி கேட்டு தார்மீக அடிப்படையில் அலுவலகம் அந்த விநியோகஸ்தர்களை காவல்துறையை விட்டு அவமானப்படுத்திய இயக்குனர் ஏ ஆர் முருகதாஸே மன்னித்து கேள்’ என்றும் ’இப்படிக்கு உங்களால் பல கோடி நஷ்டம் அடைந்த தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள்’ என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Published by
adminram