என் கதையை வேணான்னு அவங்க சொன்னது சரி... மகாராஜா இந்தளவு உருவாக அதுதான் காரணமாம்..!

by ராம் சுதன் |

சமீபத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் 50வது படமாக வெளிவந்தது மகாராஜா. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை என எல்லாமே அருமை தான். யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்கள் படத்தை சுவாரசியமாக நகர்த்திக் கொண்டு போகும். அந்த அளவு யார்றா இந்தப் படத்தை இயக்கியது என எல்லாருமே கேட்டனர். அவர் தான் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். இவர் ஏற்கனவே குறும்படத்தை இயக்கி கமல் கையால் விருது வாங்கியவர்.

நாளைய இயக்குனர்களில் அன்றே வெற்றிகரமாக வலம் வந்தவர் நித்திலன் சுவாமிநாதன். இவர் இயக்கிய குறும்படம் புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம். இந்தக் குறும்படத்தை ஒரு வருடம் கழித்து கமல் ஒரு பேட்டியின்போது பாராட்டியுள்ளார். அவர் அப்போது 'சின்ன சின்ன படங்கள் இன்னும் சொல்லப் போகணும்னா சினிமாவைப் பற்றி அதிகம் தெரியாத தம்பி கலைஞர் டிவியில் வந்தது. 'புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்' என்று. வியத்தகு விஷயம் அது.

சினிமாவையும் யாராவது 3 வருடம் பொறுமையாகக் கற்றுக்கொடுத்தால் ஒரு சிறந்த இயக்குனராக முடியும்' என்றார். அது ஒரு வருடம் கழித்து இன்னும் ஞாபகம் வைத்து சொல்றாரேன்னு நினைக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.

இவர் மகாராஜா படத்தின் கதை உருவானது பற்றி சொல்லும்போது இவ்வளவு கஷ்டப்பட்டாரா என்று எண்ண முடிகிறது. ஆரம்பத்தில் அவர் எடுத்த குறும்படத்தின் நான் லீனியர் ஸ்டோரி தான் மகாராஜா கதை உருவாக அடித்தள காரணம் என்கிறார். அந்த வகையில் ஒரு கதையை உருவாக்கி எத்தனையோ பேரிடம் சொல்லிப் பார்த்தாராம். யாருமே ஒத்துக்கலையாம். கதை அவர்களுக்குப் பிடிக்கவில்லையாம்.

நடிகர் சாந்தனு கூட கதை ரொம்ப பிடித்து ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் சென்று அறிமுகப்படுத்தினாராம். ஆனால் எந்தப் பலனும் இல்லையாம். அதன்பிறகு அந்தக் கதைக்கான கருவை மட்டும் எடுத்துக்கொண்டு வேறு ஒரு ஸ்டைலில் பண்ணின கதை தான் மகாராஜா என்கிறார். ஆரம்பத்தில் அவர்கள் என் கதையை நிராகரித்தது சரி தான்.

அப்போது எனக்கு இருந்த அனுபவம் அவ்வளவு தான். அதன்பிறகு அவர்கள் நிராகரித்ததால் தான் கொஞ்சம் டைம் எடுத்து இன்னும் நல்லா பண்ணனும் என்ற உத்வேகம் வந்து மகாராஜா கதையை பண்ண முடிந்தது என்கிறார் நித்திலன்.

Next Story