Connect with us

Cinema History

சும்மா படிச்சா மட்டும் டைரக்டர் ஆக முடியாது… இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் சின்ன வயசில் சந்திச்ச அந்த அவமானம்..!

இப்போ டைரக்டர்களுக்கு எல்லாம் விஸ்காம் படிப்பு வந்து விட்டது. ஆனா எந்த வித படிப்பும் படிக்காமலேயே ஆர்.சுந்தரராஜன் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தார். அப்படின்னா …

அதுல எவ்வளவு வலிகளையும், வேதனைகளையும், அவமானங்களையும் சந்திச்சிருப்பார் அப்படின்னு நமக்கு நினைக்கத் தோணும். ஆனா அவர் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே சின்ன வயசிலேயே பெரிய அவமானத்தை சந்திச்சிருக்கார். அது என்னன்னு பார்ப்போம்.

சினிமாவில் இயக்குனராக ஆவதற்கு படிப்பு தேவையான்னு யூடியூப் சேனல் ஒன்றில் ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்படுகிறது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

படிப்பு தொழில் கல்விங்கறது வேற. நாம இயற்கையா பார்த்து தெரிஞ்சிக்கிற விஷயங்கள் வேற. எனக்கு 5 வயசு. அண்ணனுக்கு 6 வயசு. மதியம் இரண்டரை மணி. அக்கா சாப்பிட கூப்பிடுறாங்க. ரெண்டு பேரும் அக்கா வீட்டுக்குப் பசியோட ஓடறோம்.

அங்க போய் உட்கார்ந்ததும் நல்லா இலை போட்டு வச்சிருக்காங்க. உட்கார்ந்த உடனே ரெண்டு பேரும் எழுந்திருங்க அப்படின்னு எங்க அக்கா சொல்றாங்க. நீங்க ரெண்டு பேரும் அப்படி போய் உட்காருங்கன்றாங்க. அங்க பார்த்தா பிளேட். நாய்க்கு சாப்பாடு வைக்கிற மாதிரி.

ஏன்னா எங்க பெரியம்மா பசங்க எல்லாம் வசதியானவங்க. அவங்களுக்காக இது. இந்த சைடு இப்படி கொடுக்க முடியாது. அனாதைப் பசங்களுக்குக் கொடுக்குற மாதிரி பிளேட் போட்டு வச்சிருந்தாங்க. எங்களுக்கு என்னன்னா அந்த டைம்ல இங்க உட்காருதுக்கு அங்க உட்காருவோம்னு இருந்துட்டோம்.இது நடந்து முடிஞ்சிடுச்சு.

கடைசில என்னன்னா அந்த வீட்டுலயே பொண்ணு எடுக்க வேண்டிய சூழ்நிலை வருது. எங்க அண்ணன் போய் அங்க கல்யாணம் பண்ணிக்கிறாரு. இப்ப நான் அங்க அத்தை வீட்டுல காபி கடை வச்சிருக்காங்க. அப்படி இருந்தும் காபி குடிக்கக்கூடாதுன்கறதுல கவனமா இருக்கேன். நானும் எங்க அண்ணனும் தான் அங்க சாப்பிடப் போனோம். இப்ப அண்ணன் அந்த வீட்டுலயே போய் பொண்ணு எடுத்துட்டாரு. இப்போ போக வேண்டிய சூழ்நிலை.

ரெண்டு பேரும் தான் ஓடி வர்றோம். ரெண்டு பேரும் தான் உட்காருறோம். ரெண்டு பேரையும் தான் எழுந்திருக்கச் சொன்னாங்க. எனக்கு உரைச்சது. எங்க அண்ணனுக்கு உரைக்கல. அதுக்கு உள்ளாற அவமானம் இருந்ததுங்கறதை நான் ஃபீல் பண்ணினேன்.

எங்க அண்ணன் என்ன இங்க உட்கார்ந்து சாப்பிடுறத அங்க உட்கார்ந்து சாப்பிடுறோம். ‘இவ்வளவு தான… இதுல ஒண்ணும் பெரிய இது இல்ல’ன்னாரு. அப்படி சாதாரணமா எடுத்துக்கறவங்களும் உண்டு. அதே மாதிரி பிராக்டிகலா பார்த்து இதுக்குள்ளாற ஒரு விஷயம் இருக்குன்னு தெரிஞ்சவன் டைரக்டர் ஆகிடுறான். சும்மா படிச்சதனால மட்டும் டைரக்டர் ஆக முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் பயணங்கள் முடிவதில்லை, அம்மன் கோவில் கிழக்காலே, ராஜாதி ராஜா போன்ற பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema History

To Top