தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமையை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்து தொடர்ந்து 7g ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், காதல் கொண்டேன் என பல வித்யாசமான வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக சிறந்து விளங்கி வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது தனது திரைப்பயணத்தில் முதன்முறையாக ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். சாணிக் காயிதம் என்ற படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு ஜோடியாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் போஸ்டர் ஒன்று நேற்று வெளியாகி ரசிகர்ளின் கவனத்தை ஈர்த்து. இது குறித்து செல்வராகவன், ” இந்த புது பயணத்தைக் குறித்து, ரொம்ப சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…