
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் என்று சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியது. ஐஸ்வர்யா மருத்துவர் ஆவார். இவருக்கு மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணி ஓனரின் மகனான ரோஹித்தை திருமணம் பேசி முடிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐஸ்வர்யா – ரோஹித் திருமணம் இன்று காலை மகாபலிபுரத்தில் நடைபெற்றது. அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.






