More

த்ரிஷாவை நிராகரித்த இயக்குனர் ஷங்கர்… என்ன காரணம்?

தமிழில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்தவர் டைரக்டர் ஷங்கர். இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன் என இவரது சூப்பர் ஹிட் படங்களின் வரிசை ரொம்பவே நீளம். இந்தநிலையில், இவர் தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படம் எடுக்க இருக்கிறார். 

முன்னணி நடிகர்களை வைத்து மட்டும்தான் ஷங்கர் படமெடுப்பார் என்று ஒரு காலத்தில் பேசப்பட்டது. அந்த மாயையை உடைக்க முற்றிலும் புதுமுகங்களாக வைத்து இவர் எடுத்த படம்தான் பாய்ஸ். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. 

இந்தநிலையில், பாய்ஸ் படத்தில் ஹரிணியாக நடித்த ஜெனிலியாவுக்குப் பதில் த்ரிஷா பெயர் அடிபட்டதாக ஷங்கரின் உதவி இயக்குனர் முத்துவடுகு என்பவர் கூறியிருக்கிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் அவர் கூறுகையில், “பாய்ஸ் பட ஹீரோயின் தேடுதல் வேட்டை நடந்துகொண்டிருந்தது. அப்போது மிஸ் மெட்ராஸ் போட்டிக்குப் போயிருந்தோம். அப்போது அங்கு முன்னாள் மிஸ் மெட்ராஸ் ஒருவரும் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் பிடித்துப் போய் வீடியோ எடுத்தோம். 

அந்த வீடியோவை ஷங்கர் சாரிடம் கொண்டுபோய் காட்டினோம். அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு ரொம்ப நேரம் அவர் அமைதியாக இருந்தார். என்ன ஆச்சு சார் என்று நாங்கள் கேட்கவும். `இந்தப் பொண்ணுகிட்ட ஏதோ மிஸ் ஆகுது. வேற ஆளைப் பாருங்க’ என்று சொல்லிவிட்டார். அந்த முன்னாள் மிஸ் மெட்ராஸ் வேறு யாரும் இல்லை. நம்ம த்ரிஷாதான்’’ என்று போட்டுடைத்திருக்கிறார் முத்து வடுகு. 
 

Published by
adminram

Recent Posts