போட் படத்துக்கு இவ்ளோ கஷ்டப்பட்டாரா இயக்குனர்... 100 சிஜி கம்பெனி வந்தாலும் அப்படி செய்ய முடியாதாமே...!

'போட்' பட இயக்குனர் சிம்புதேவன் கடலில் சூட்டிங் எடுத்தது எப்படின்னு பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க, பார்க்கலாம்.
கடல் சூட்டிங் அப்படிங்கறது நமக்கு கொஞ்சம் கூட பரிச்சயம் இல்லாதது. மத்த சூட்டிங்னா நமக்கு என்னைக்காவது பிரச்சனை இருக்கும். ஆனா இந்தப் படத்துக்கு ஃபுல் டைம் பிரச்சனை தான். ஏன்னா கடல் நம்ம கன்ட்ரோல்ல கிடையாது.
நாலு ஆளு அடி ஆழம், 30 அடில நிக்கும்போது அடிக்கிற காத்துக்கு போட் ஒரு பக்கம் திரும்பும். கேமரா மேன் ஒரு பக்கம் இருப்பாரு. எல்லாரும் நல்லா நடிச்சிருப்பாங்க. கேமராவை எடுத்துப் பார்த்தா அதுல ஷேக் ஆகியிருக்கும். திரும்ப ரீடேக் எடுக்கணும். மழை, காற்று, அலைகளோட அடர்த்தி, இது எல்லாமே மாற மாற மாற கடலாப் பார்த்து ஹெல்ப் பண்ணா மட்டும் தான் எடுக்க முடியும். அதான் சூழ்நிலை.
ஏன்னா அந்தக் கஷ்டத்தையும் நாங்க பழகிக்கிட்டு அதுக்குள்ள என்ன எடுக்க முடியும்னு ஒரு மூணு நாலு நாள்ல எங்களுக்கு ஒரு ஐடியா கிடைச்சது. அதை அடிப்படையா வச்சித் தான் எடுத்தோம். என்னன்னா இதுல நிறைய பேருக்கு நீச்சல் தெரியாது.
மீனவர்கள் வெயிட் பண்ணுவாங்க. விழுந்தா பிடிச்சிடலாம்னு. நிறைய கருவிகள் கடலுக்குள்ள விழுந்துருக்கு. ஏன்னா இதுதான் எடுக்கணும்னு இருக்கும்போது அதுக்குள்ள கருவிகள் இருக்கு. எல்லாத்தையுமே ட்ரோன்ல எடுக்க முடியாது.
சில விஷயங்களை குளோசப்ல எடுக்க நினைச்சா ஆடிக்கிட்டே இருக்கும். அதை முடிஞ்ச அளவு கஷ்டப்பட்டு எடுத்தோம். இதை யார் பண்ணினாலும் இப்படித்தான் பண்ணியிருக்க முடியும். இருக்கறதுலயே கஷ்டம் இயற்கையை செட் போடறது தான். பெரிய நீச்சல்குளத்துல அவ்வளவு பெரிய அலைகளைக் கொண்டு வர முடியாது.
அது இயற்கையா எடுக்கறதை விட அதிக செலவாகும். சில காட்சிகள் எடுக்கும்போது அது ரொம்ப ப்ரஷாவும் இருந்தது. அதை எத்தனை சிஜி கம்பெனி வந்தாலும் அப்படி கொண்டு வந்துருக்க முடியாது. ஒரிஜினல் கடலோட ஃபீலிங்கை வந்து செட்ல கொண்டு வர்றது ரொம்ப ரொம்ப கஷ்டம். அதுக்கு நம்ம பட்ஜெட் மாதிரி 100 மடங்கு செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.