கோபத்தின் உச்சிக்குச் சென்ற இயக்குனர்... கமல் செய்தது என்ன?
இந்தியன் 2 படம் வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. கடைசியாக நடந்த பிரஸ் மீட்ல கமலை ஷங்கர் செல்லமாகக் கோபித்துக் கொண்டாராம். நீங்க எங்க போனாலும் இந்தியன் 3 ஐப் பத்தியேப் பேசுறீங்கன்னு சொல்றாரு. அது ஒண்ணும் நான் திட்டம் போட்டுப் பேச வேண்டிய அவசியம் இல்ல. இந்தியன் 2 ரொம்ப நல்லாருக்கு. அதை எடுக்கும்போதே இந்தியன் 3 ஐயும் எடுத்தாச்சு. அதனால அதையும் பத்திப் பேசுனேன் என்றார் கமல்.
Also Read: ‘தெறி’ பட சமயத்தில் அட்லீ சொன்ன ஒரு வார்த்தை! இப்ப வரைக்கும் ஓஹோனு இருக்கேன்.. பூரிப்பில் தாணு
கமல் சாரின் அப்பா, அவரோட 2 சகோதரர்கள் என அவங்க 3 பேரோட போட்டோவைக் கொண்டு போய் தோட்டாதரணிக்கிட்ட கொடுத்துட்டேன். இதுல இருந்து ஒரு உருவத்தை உருவாக்குங்கன்னு சொன்னேன். அவரு உருவாக்குனது தான் இந்தியன் தாத்தா என்கிறார் இயக்குனர் ஷங்கர்.
அவர் தான் இந்தியன் 2வில் அதகளப்படுத்தப் போகிறார். சேனாபதி உபயோகப்படுத்துன பேனா, கத்தி, பெல்ட் என எல்லாவற்றையும் அப்படியே உபயோகப்படுத்தினோம் என்றார் ஷங்கர்.
அடுத்து கமல் பேசும்போது என்னுடைய சினிமாப்படங்களில் எது ஓடும்? எது ஓடாது என்பதைக் கணிக்கவே முடியாது என்றார். மகளிர் மட்டும் படத்திற்கு கமல் திரைக்கதை எழுதினார். ஆனால் ஓடுமா என சந்தேகம் வந்தது. சிங்கீதம் சீனிவாச ராவ் படத்தை இயக்குகிறார். சரிகா அந்தப் படத்தைப் பார்த்ததும் 27 இடத்தில் மிஸ்டேக் என்று குறிக்கிறார்.
கமல் அப்போது பார்த்த போது அதுவும் சரி தான் என்று அவருக்குப் பட்டது. உடனே 'நான் இப்போ மகாநதின்னு ஒரு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அது நல்லா ஓடும். அதனால இந்தப் படத்தை அவசரப்பட்டு ரிலீஸ் பண்ண வேண்டாம். அது வந்ததும் 3வது வாரம் ரிலீஸ் பண்ணுங்க'ன்னு சொன்னாராம்.
இயக்குனருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் தெலுங்கு படம் எடுக்கப் போய்விட்டார். இந்தப் படத்துல 'கறவை மாடு' பாட்டுக்கு ரோகிணி, ரேவதி, ஊர்வசி 3 பேரும் பேசி வச்சிக்கிட்டு நடிக்க மாட்டோம்னு சொன்னாங்களாம்.
Also Read: ‘பன் பட்டர் ஜாம்’ யாரு? பதிலை சொல்லி ஹீரோயினை முகம் சுழிக்க வைத்த பிக்பாஸ் ராஜூ.. ஆரம்பமே இப்படியா?
அவங்களை சமாதானப்படுத்த கமல் பேச, இதுதான் மேட்டர்னு அவங்க சொல்ல, வாலி கறவை மாடை மாற்ற மாட்டேன் என்று சொல்லி விட்டாராம்.கடைசியில் சமாதானம் செய்து பாடலும் எடுக்கப்பட்டது. படம் ரிலீஸ். பட்டி தொட்டி எங்கும் ஹிட். மகாநதி பெரிய அளவில் கமர்ஷியலா வெற்றி பெறவில்லை. ஆனா இப்போ அந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.