இயக்குனர் ஏ எல் விஜய்க்கும் அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் இன்று ஆண்குழந்தை பிறந்துள்ளது.
இயக்குனர் ஏ எல் விஜய் தயாரிப்பாளர் ஏ எல் அழப்பனின் இரண்டாவது மகனாவார். மலையாள இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மதராசப்பட்டணம், தெயவ திருமகள் மற்றும் தலைவா ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார். இடையில் நடிகை அமலா பாலுடன் காதல் ஏற்பட அவரைத் திருமணம் செய்துகொண்டு ஒரே ஆண்டில் விவாகரத்து செய்தார்.
இதையடுத்து ஏ.எல் விஜய் ஐஸ்வர்யா என்ற பெண் மருத்துவரை கடந்த வருடம் 2வதுதிருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இன்று அவர்களுக்கு அழகான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து திரையுலக நண்பர்களும் ரசிகர்களும் விஜய்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு வாழ்த்துகள் சொல்லி வருகின்றனர்.
Viduthalai2: ஒளிப்பதிவாளர்…
சிவகார்த்திகேயன் படங்கள்…
கங்குவா படத்தின்…
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…