
தமிழ் சினிமாவில் புது வசந்தம் திரைப்படம் மூலம் இயக்குனரானவர் விக்ரம். அதன்பின் பூவே உனக்காக், சூர்ய வம்சம், வானத்தைப் போல என ஹிட் படங்களை கொடுத்தவர்.
சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ‘ ரஜினியின் ‘பாபா’ படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. அப்படத்தை இயக்குமாறு ரஜினி என்னிடம் கேட்டார். அப்போது, உன்னை நினைத்து படத்தை இயக்கி வந்ததால் என்னால் இயக்க முடியவில்லை. எனவே, அப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.

அதேபோல், அன்பே சிவம் படத்தை இயக்கும் வாய்ப்பு எனகு வந்தது. அதன்பின், பிரியதர்ஷனை கேட்டனர். பின்னர் சுந்தர் சி அப்படத்தை இயக்கினார். அதன்பின் தற்போது வரை ரஜினி, கமல் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை’ என விக்ரமன் ஃபீல் செய்துள்ளார்.
மேலும், விரைவில் தனது மகன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கவுள்ளதாக கூறினார்.





