வழக்கமான இசையமைப்பாளரை கழட்டிவிட்ட இயக்குனர்: கார்த்தி காரணமா?

இந்நிலையில் இயக்குனர் மித்ரன் இயக்க உள்ள மூன்றாவது படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார் என்பது குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. தற்போது அது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மித்ரன் கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது 

பி.எஸ்.மித்ரனின் முந்தைய இரண்டு படங்களான ’இரும்புத்திரை’ மற்றும் ’ஹீரோ’ படங்களில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த நிலையில் தற்போது இந்த படத்தில் வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கார்த்தியின் அழுத்தம் காரணமாகவே இந்த படத்தில் இசையமைப்பாளரை இயக்குநர் மித்ரன் மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் ஜிவி பிரகாஷின் இசை அமைத்ததை சமீபத்தில் கேட்ட கார்த்தி அசந்துபோய் இனிமேல் தனது படத்துக்கு  ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி வெளிவரும் வரை பொறுமை காப்போம்

Published by
adminram