போராட்டங்களின் போது ரயில்கள் மற்றும் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துபவர்களை கண்டதும் சுட உத்தரவிடுவேன் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனால் மாணவர்களும் பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் மக்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் போலிஸாருக்கும் இடையில் மோதல்கள் எழுந்துள்ளன.
சில இடங்களில் பேருந்துகள், ரயில்கள் மற்றும் பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்படுகின்றன. இது சம்மந்தமாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் அங்காடி அளித்த நேர்காணலில் ‘ரயில் போக்குவரத்துக்காக 13 லட்சம் ஊழியர்கள் இரவும் பகலுமாக உழைக்கின்றனர். இந்த சட்டத்தால் உள்ளூர் சிறுபான்மையினர் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால் பொருளாதாரத்தைக் குலைக்க சிலர் முயல்கின்றனர். ரயில்களை சேதப்படுத்தவர்களைக் கண்டதும் சுட உத்தரவிடுவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
Viduthalai 2:…
விடுதலை 2…
Actor karthi:…
அமரன் திரைப்படம்…
Lubber Pandhu: கடந்த…