விமானத்தில் கோளாறு ; 2 மணி நேரம் காத்திருந்த ரஜினி : ரசிகர்கள் செய்த செயல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை மைசூருக்கு ஒரு விமானம் புறப்பட்டது. அதில், நடிகர் ரஜினி உட்பட 48 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் அதில் கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.

எனவே, விமானத்தை மீண்டும் கீழே இறக்க விமானி அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும் விமான அவசரமாக தரையிறக்கப்பட்டது.  எனவே, அந்த விமானத்தில் ரஜினி 2 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. எனவே, விமானத்தில் இருந்த பயணிகள் பலரும் ரஜினியுடன் உரையாடி பொழுதை கழித்தனர். அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். ரஜினியும் அவர்களுடன் சிரித்த முகத்தோடு உரையாடியதாகவும், செல்பிக்கு போஸ் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Published by
adminram