விநியோகஸ்தர்கள் மிரட்டல் விவகாரம்: ஏ.ஆர்.முருகதாசுக்கு நீதிமன்றம் கண்டனம்

இருப்பினும் இந்த படம் தங்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்ததாக ஒரு சில விநியோகஸ்தர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஏஆர் முருகதாஸ் வீடுகளின் முன் போராட்டம் செய்தனர்

இதனை அடுத்து விநியோகிஸ்தர்கள் தன்னை மிரட்டுவதாகவும் இதனால் தனது வீட்டிற்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் ஏஆர் முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

இந்த நிலையில் திடீரென தனது மனுவை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார் ஏஆர் முருகதாஸ் தெரிவித்தார். இதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? என நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் ஏஆர் முருகதாஸ் தனது வழக்கை வாபஸ் பெறுவதாக கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது 

Published by
adminram