நயன்தாரா ஷோ நல்லா வந்துச்சு!.,. மகிழ்ச்சியில் டிடி போட்ட செம கியூட் டேன்ஸ்(வீடியோ)...

by adminram |

efd770bb7c3e39ff6a32798c18b265bb-1

விஜய் டிவியில் பல வருடங்களாக மாறாத விஷயம் எனில் அது டிடி என்கிற திவ்யதர்ஷினி. நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான இவர் தனது ஸ்டைல், பேச்சு மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார். காபி வித் டிடி நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டி எடுத்து மேலும் பிரபலமானார். தனது சாதுர்யம் மூலம் அவர்கள் விரும்பாத கேள்விகளுக்கும் பதில் சொல்ல வைத்துவிடும் திறமைசாலி. சில வருடங்களுக்கு முன் தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டார்., ஆனால், கருத்துவேறுபாட்டால் விவாகரத்து பெற்ற அவர் அதன்பின் திருமணம் செய்து கொள்ளவில்லை.

9e0b9919acc922d61b98f9e78b5ace4b

தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி வருகிறார். தனுஷ் இயக்கிய பவர் பாண்டி திரைப்படத்திலும் நடித்தார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்கள் மற்றும் டப்ஸ்மாஸ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

5a11032fe7e59ada9eecb5a37a98b53c-2

இந்நிலையில், சமீபத்தில் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை அவர் நடத்தினார். இதில், நயன்தாராவும் கலந்து கொண்டு அவரின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்நிகழ்ச்சி முடிந்தபின், நிகழ்ச்சியும் நல்லா வந்துச்சு....இந்த ரீலும் நல்லா வந்துச்சு...அதனால இப்ப இது இன்ஸ்டாவுக்கு வந்துச்சு...’ என பதிவிட்டுள்ளார்.

Next Story