Categories: latest news

சிறுவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வீடியோ!.. பிரபல திவ்யா கள்ளச்சி கைது!..

Divya kallachi: டிக்டிக் ஆப்பை பலரும் பயன்படுத்திய போது அதில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும் பல யுக்திகளை கையாண்டனர். ஜிபி முத்து போன்றவர்கள் சினிமா பாடல் காட்சிகளுக்கு நடித்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டனர். ரவுடி பேபி என ஒருவர் வந்தார். அசிங்கமாக உடைகளை அணிந்து நடனமாடி வீடியோ வெளியிட்டார்.

ஜிபி முத்துவும், அவரும் இணைந்தும் வீடியோ போட்டார்கள். அதன்பின் அவர்கள் இருவரும் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் திட்டி வீடியோ வெளியிட்டு டிக்டாக்கில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இவர்கள் இல்லாமல் பல பெண்கள் ஆபாசமாக பல விஷயங்களையும் செய்தார்கள்.

இதில், ரவுடி பேபி திருச்சி அருகே பாலியல் தொழில் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், வேறு சில வழக்குகளிலும் சிக்கி சில மாதங்கள் சிறையில் இருந்தார். அவரை போலவே கார்த்திக் என்கிற நபர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக சொல்லி பிரபலமானவர்தான் திவ்யா. கார்த்திக் மாமா ஐ லவ் யூ.. கார்த்திக் நீ எங்கடா இருக்க?.. என டிக்டாக்கில் வைப் ஏற்றியவர் இவர்.

பின்னாளில் அப்படி யாருமே இல்லை. பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன் என சொன்னார். டிக்டாக் ஆப்பிற்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் திவ்யா கள்ளச்சி என்கிற பெயரில் இன்ஸ்டாகிராம், யுடியூப் ஆகியவற்றில் வீடியோ வெளியிட்டு வந்தார். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இந்நிலையில்தான், சமூக ஆர்வலர் ஒருவர் திவ்யா மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். குழந்தைகளை வீட்டில் அடைத்துவிட்டு அவர்களை பாலியல்ரீதியாக பயன்படுத்தி வீடியோ எடுத்து சம்பாதித்து வருகிறார் என்கிற பகீர் தகவல் அதில் சொல்லப்பட்டிருந்தது. அந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறிப்பதகவும் சொல்லப்பட்டிருந்தது. இதையடுத்து விசாரணையை துவங்கிய விருதுநகர் போலீசார் திவ்யா மற்றும் இதில் தொடர்புடைய 4 பேரை கைது செய்துள்ளார்.

இவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தன் மீது எந்த தவறும் இல்லை. பொய்யாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது என சொல்லியிருக்கிறார் திவ்யா. ரவுடி பேபிக்குபின் திவ்யா கள்ளச்சியும் சிறைக்கு போவது உறுதியாகியுள்ளது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

10 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

10 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

17 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

18 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

20 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago