திமுக, அதிமுக வேட்பாளரை தோற்கடித்த ரஜினி பட இயக்குனரின் சகோதரர்

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கூட்டணி கட்சிகளும் கிட்டத்தட்ட சம அளவில் வெற்றி பெற்று வருவதாக முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன 

இந்த நிலையில் திமுக, அதிமுகவை அடுத்து சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் சுயேட்சை வேட்பாளர்களில் ஒருவரும் ரஜினியின் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் அவர்களின் சகோதரருமான பிரபு என்பவர் சென்னை அருகே ஊராட்சி ஒன்றிய பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் 

வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு 3846 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இளம்பருதி 3696 வாக்குகளை மட்டுமே பெற்றதா 155 வாக்கு வித்தியாசத்தில் பிரபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

கடந்த சில ஆண்டுகளாகவே புரட்சிகரமான சமூக கருத்துக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் ரஞ்சித்தின் சகோதரர் பிரபு வெற்றி பெற்றுள்ளதை அந்த பகுதியில் உள்ளவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Published by
adminram