More

ரஜினிக்கு எதிராக ஒன்றுசேரும் திமுக-அதிமுக!

அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இருவேறு துருவங்களாக இருந்தாலும் இந்த இரண்டு கட்சிக்கு மாற்றாக ஒரு புதிய கட்சி முளைத்தால் அந்த கட்சியை ஒழித்து விடுவது தான் இந்த இரு கட்சிகளின் முதல் பணியாக இருக்கும் என்பதும் விஜயகாந்த் கட்சி இந்த இரு கட்சிகளால்தான் தேய்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

இந்த நிலையில் தற்போது திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினிகாந்த் விரைவில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியை இரண்டு கட்சியினரும் அவ்வப்போது டார்கெட் செய்து விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது துக்ளக் விழாவில் தான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதற்கு அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் ஒன்றிணைந்து அவரை எதிர்த்து விமர்சனம் செய்து வருகின்றார்கள்

பெரியாரைப் பற்றி பேசும்போது சிந்தித்து பேச வேண்டும் என்று முக ஸ்டாலின் அவர்களும் உண்மை தெரியாமல் பேசும் ரஜினிகாந்த் விரைவில் இது குறித்து மன்னிப்பு கேட்பார் என்று உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கூறியுள்ளனர் 

அதேபோல் பெரியாரை பற்றி பழைய நினைவுகளைப் பற்றிப் பேசி ஆராய்ச்சி செய்வதால் ரஜினிக்கு என்ன பட்டமா கொடுக்கப் போகிறார்கள்? அனைவரும் மதிக்கும் பெரியார் பற்றி ரஜினி பேசுவது கண்டனத்துக்குரியது என்று அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியுள்ளார். அதேபோல் ரஜினிகாந்த் அல்ல பெரியாரை பற்றி யார் விமர்சனம் செய்தாலும் ஏற்க முடியாது என அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார்

மொத்தத்தில் இந்த விஷயத்தில் ரஜினியை எதிர்ப்பதில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து உள்ளதாக அரசியல் இவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Published by
adminram

Recent Posts