சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று விழா ஒன்றில் கலந்து கொண்ட போது பத்திரிகையாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறிய அறிவுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
செய்தி என்பது பால் போன்றது என்றும் அதில் தண்ணீர் என்ற பொய்யை கலந்தால் கலந்து மக்களுக்கு செய்தியை கொடுக்க வேண்டாம் என்றும் உண்மையான செய்தியை கொடுங்கள் என்றும், அவ்வாறு பொய்யான செய்தியை கொடுத்தால் ஒரு நாள் கண்டிப்பாக மாட்டிக் கொள்வீர்கள் என்று கூறி பால்காரர் குட்டி கதை ஒன்றை கூறினார்
அந்த கதையில் ஒரு பால்காரர் தண்ணீர் கலக்காமல் பால் விற்பனை செய்து கொண்டிருந்ததாகவும், ஆனால் அவர் கடைக்கு எதிரே இன்னொருவர் பாலில் தண்ணீர் கலந்து குறைந்த விலையில் விற்பனை செய்ததாகவும், இதனால் தண்ணீர் கலக்காமல் பால் விற்றவருக்கு வியாபாரம் குறைந்தது என்றும், ஆனால் ஒரு கட்டத்தில் பத்து ரூபாய் பால்காரர் தான் நல்ல பால் விற்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொண்டு மீண்டும் அவரிடம் பால வாங்க தொடங்கினர் என்றும் ஒரு குட்டிக்கதையை கூறினார்.
இந்த குட்டிக் கதையும் பத்திரிகையாளர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலர் ரஜினியை பாராட்டியும் ஒருசில ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…