இவர்களுக்கு நல்லாசிரியர் விருது வேறா?… மாணவிகளிடம் அத்துமீறிய இரு ஆசிரியர்கள் !

Published on: February 26, 2020
---Advertisement---

bd0ea6da674a636bd720dcc3fa04bfd5-2

செங்கல்பட்டு அரசு பள்ளியில் பணிபுரிந்த இரு ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர்கள் நாகராஜ் மற்றும் புகழேந்தி. இவர்கள் இருவரும் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர்கள் மேல் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அவர்களை செங்கல்பட்டு போலிஸார்  கைது செய்தனர். இதையடுத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அவர்கள் இருவரும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து மாணவிகள் சார்பில் மேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என அறிவித்த  சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நாகராஜுக்கு  25000 ரூபாய் அபராதமும் 5 ஆண்டு சிறை தண்டனையும் புகழேந்திக்கு 25000 ரூ அபராதமும் 5 ஆண்டு சிறைதண்டனையும் விதித்துள்ளது. தண்டனை பெற்றவர்களில் நாகராஜ் நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment