More

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கிறோமோ? திரைப்படங்கள் சொல்லும் சேதி என்ன?

சுதந்திர தினத்தை நாம் பெற்றது தான் நமக்கு தெரியும். அதற்குப் பின்னால் எவ்வளவு பேர் ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிர் நீத்து பெற்றுத் தந்தனர் என்பதை வெகு சிலரே அறிவர். 

Advertising
Advertising

பெற்ற சுதந்திரத்தை இன்று பேணிக்காக்க முடியாமல் தவிக்கிறோம். நாட்டுக்காக என்று எவரும் எந்த ஒரு செயலும் செய்வதில்லை. வீட்டிற்காகவே செய்கிறார்கள். இது நாம் பெற்ற சுதந்திரத்தை எப்படி பேணிக்காப்பது என்று தெரியாமல் வருவதுதான். 

இன்னொரு முறை நாம் அடிமைப்பட்டால் தான் சுதந்திரத்தின் அருமை நமக்குத் தெரிய வரும். தற்காலத்தில் சுதந்திரத்தை சுதந்திரத் தினத்தன்று மட்டுமே ஒரு நினைவு நாள் போலக் கொண்டாடிவிட்டு டிவியில் சிறப்பு நிகழ்ச்சியைக் கண்டு களித்து விட்டு, விடுமுறை தினத்தை ஜாலியாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

மற்றபடி இந்த நாளை நாம் தினமும் நினைத்து யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்ற இலக்கை நோக்கி என்றாவது முன்னேறிச் சென்றுள்ளோமா என்பதில் இன்று வரை சந்தேகமே வலுக்கிறது.

உதாரணமாக இந்தியன் படத்தில் லஞ்சம் பெற்ற சுதந்திர நாட்டில் தான் தலைவிரித்தாடுகிறது என்பதைக் கருவாக அமைத்து அதை ஒழிக்க வேண்டும் என்று கதாநாயகன் பாடுபடுவார். ஜெய்ஹிந்த், ரோஜா, குருதிப்புனல், பேராண்மை படங்களில் இன்னும் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். 

காரணம் இதில் யாரும் வெற்றி பெறவில்லை. இன்னும் ஒருவருக்கொருவர் அடிமைகளாகவே உள்ளனர். மெலியவன் வலியவனுக்கு அடிமை என்னும் பழக்கமே காலகாலமாக தொன்று தொட்டு நிலவி வருகிறது. அப்படி என்றால் பெற்ற சுதந்திரம் எங்கே என்ற கேள்வி எழுகிறது.

அக்கால திரைப்படங்களான தாயே உனக்காக, தியாக பூமி, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் என்று பல படங்கள் சுதந்திரத்தைப் பறைசாற்றின. கொடிகாத்த குமரனின் தியாகத்தைச் சொன்னது ராஜபார்ட் ரங்கத்துரை. 

சுதந்திரத்தைப் போற்றும் வகையில் அன்றே சில படங்கள் தமிழ்த்திரையுலகிற்கு வந்துள்ளன. அவற்றைப் பற்றி காணலாம். 

மணிமேகலை 

சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலரையும் ஆங்கிலேய அரசு கைது செய்தது. பின்னர் சிறையில் அடைத்த காலகட்டத்தில் தான் இந்தப்படம் வெளியானது. இதில் கே.பி.சுந்தராம்பாள் தனது வெண்கலக்குரலால் சிறைச்சாலை இது என்ன செய்யும்? சரீராபிமானம் இலா ஞானதீரரை, சிறைச்சாலை இது என்ன செய்யும்? என்று போராட்டக்களத்தில் நின்ற தியாகிகளுக்கு  ஆதரவு, உற்சாகத்தை வழங்கினார்.      

1940ல் வெளியானது. இப்படத்தில் கே.பி.சுந்தராம்பாள் நடித்துள்ளார். இவர் தனது வெண்கலக்குரலால் சிறைச்சாலை இது என்ன செய்யும்? சரீராபிமானம் இலா ஞானதீரரை சிறைச்சாலை இது என்ன செய்யும்? என்று போராட்டக்களத்தில் நின்ற தியாகிகளுக்கு ஆதரவையும் உற்சாகத்தையும் வாரி வாரி வழங்கினார். 

நாம் இருவர் 

நாடு சுதந்திரம் அடைந்த ஆண்டில் இந்தப்படம் வெளியானது. ஏவிஎம் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் மகாகவி பாரதியாரின் புரட்சிகரமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று..! விடுதலை விடுதலை விடுதலை ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றன. இவை பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டன. 1947ல் வெளியான இப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம், கே.சாரங்கபாணி உள்பட பலர் நடித்துள்ளனர். ப.நீலகண்டன் கதை எழுத, ஏவி.மெய்யப்பன் இயக்கினார். படத்தை ஏவிஎம் தயாரித்தது. 

அந்தநாள் 

1954ல் வெளியான படம். ஏவிஎம் தயாரித்தது. மக்களின் மனதில் தேசப்பற்றை இளைஞர்கள் மனதில் நிலைநிறுத்தியது. காதலித்து மணந்தவன் எதிரி நாட்டுக்கு தன் நாட்டில் இருந்து வேவு பார்க்கும் வேலை செய்து வருகிறான். இந்த விவரம் மனைவிக்குத் தெரிய வருகிறது. அவர் மனதில் தேசமா, நேசமா என பெரிய போராட்டமே உருவாகிறது. இறுதியில் கணவனைக் கொன்று நாட்டுப்பற்றை நிலைநிறுத்துகிறாள் என்பதே படத்தின் கதை. தமிழில் பாடல்களே இல்லாமல் வெளியான முதல் படம் இதுதான். பாடல்களுக்கு இங்கு வேலையில்லை. கதை அந்த அளவு விறுவிறுப்பானது. 

பாரதவிலாஸ் 

தேசம் பல பாகங்களாகப் பிரிந்தாலும் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வை நச்சென்று சொன்னது பாரதவிலாஸ் படம். 

1973ல் திருலோகசந்தர் இயக்கத்தில் வெளியான படம். எம்.எஸ்.விஸ்வநாதன் இயக்கத்தில் சிவாஜி, கே.ஆர்.விஜயா உள்பட பலர் நடித்துள்ளனர். பல்வேறு மொழி, சாதி, இன வேறுபாடுகளால் பிரிந்து கிடந்தாலும், இந்தியர் என்ற ஒற்றுமையில் அனைவரும் உணர வேண்டும் என்பதை வலியுறுத்திய படம். சக்கபோடு போடு ராஜா, மின் மினி பூச்சிகள், நாற்பது வயசில், இந்திய நாடு என் வீடு ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

                            

Published by
adminram

Recent Posts