இந்தியில் வெளியான விக்கி டோனர் என்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக மார்ச் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது தாராள பிரபு என்ற படம். இதில் ஹரிஷ் கல்யாண் விந்துதானம் செய்யும் இளைஞராக நடித்துள்ளார். இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது அவர் கலந்துகொண்டு வருகிறார்.
அப்போது அவரிடம், இது போல நிஜத்திலும் வாய்ப்பு வந்தால் விந்துதானம் செய்வீர்களா என்ற கேள்விக்கு ‘அதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும்.’ என வெட்கப்பட்டுக்கொண்டே சொல்லியுள்ளார். மேலும் படத்தைப் பற்றி ‘அடல்ட் கன்டென்ட்டாக இருந்தாலும், அனைத்து தரப்பினரும் பார்க்கும் படியாக நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாக எடுத்திருக்கிறோம். ரசிகர்களை ஏமாற்றாது’ எனக் கூறியுள்ளார்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…