கோலியின் புது கார் விலை எவ்வளவு தெரியுமா ? இந்தியாவிலேயே முதல் நபர் !

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆடி க்யூ 8 என்ற புதிய காரை இந்தியாவிலேயே முதல் நபராக வாங்கியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு மிகத் தீவிரமான கார் பிரியர். விதவிதமான கார்களால் தனது வீட்டை அலங்கரிப்பவர். இந்நிலையில் இப்போது புதிதாக ஆடி நிறுவனத்தின் க்யூ 8 என்ற புதிய மாடல் காரை அவர் வாங்கியுள்ளார்.

இந்தியாவிலேயே இந்த காரை வாங்கியுள்ள முதல் நபர் கோலிதான். ஜனவரி 15 ஆம் தேதிதான் இந்த கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் விலை 1.33 கோடி ரூபாயாகும்.

இந்த காரை விராட் கோலி ஓட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Published by
adminram