சன் குழுமத்தின் ஆதித்யா சேனலை பார்ப்பவர்களுக்கு லோகேஷ் பாப்பை தெரியாமல் இருக்காது. அதன்பின் நானும் ரவுடிதான் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்து விட்டதாகவும், சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் வரை தேவைப்படுவதாக அவருடன் நடிக்கும் நடிகர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதன்பின் அவருக்கு ஏராளமானோர் உதவி செய்ய முன் வந்தனர். அதன்பின் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் மருத்துவமனை செலவை ஏற்ற நடிகர் விஜய் சேதுபதி அவரை நேரில் சென்று அவரின் உடல் நலம் விசாரித்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் லோகேஷ் பாப் விஜய் சேதுபதி மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…