சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி நீண்ட விடுமுறை இடைவெளியான 11 நாட்கள் விடுமுறை தினங்களில் வசூலை வாரி குவித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் வியாபாரம் மற்றும் வசூல் விபரங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது
’தர்பார்’ படத்தின் பட்ஜெட் 160 கோடி ரூபாய் என்று கூறப்பட்டுள்ள நிலையில் ரிலீஸான முதல் நான்கு நாட்களிலேயே ரூ.150 கோடி இந்த படம் வசூல் செய்து விட்டது என்பதும் தற்போது இந்த படத்தின் வசூல் 220 கோடியை தாண்டி விட்டது என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன
இந்த நிலையில் இந்த படம் 196 கோடி ரூபாய்க்கு ரிலீஸுக்கு முன்னரே விற்பனையாகி உள்ள தகவல் வெளிவந்துள்ளது. தர்பார் படத்தின் இந்தி உரிமை 17 கோடி என்றும், தமிழக உரிமை 63 கோடி என்றும், சேட்டிலைட் உரிமையை சன்டிவி 33 கோடிக்கு பெற்றுள்ளது என்றும், டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது
அதேபோல் தெலுங்கு உரிமை 7.5 கோடி ரூபாய், கர்நாடக உரிமை 7 கோடி ரூபாய், கேரள உரிமை 5.5 கோடி ரூபாய், மற்றும் வெளிநாட்டு உரிமை 33 கோடி ரூபாய், என வியாபாரம் ஆகியுள்ளது அனிருத் இசையமைப்பில் வெளியான இந்தப்படத்தின் ஆடியோ ரூபாய் ஐந்து கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்பதும் மொத்தத்தில் இந்த படத்தின் வியாபாரம் 196 கோடி என்பதும் தற்போது வியாபாரத்தை தாண்டி அனைத்து தரப்பினருக்கும் லாபம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…