நெய்வேலியில் இன்று என்ன நடந்தது தெரியுமா? பரபரப்பு தகவல்!
நெய்வேலி படப்பிடிப்பின் போதுதான் நடிகர் விஜய் வருமானவரித் துறை அதிகாரிகளால் அழைத்து செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று ரசிகர்களை நோக்கி கையசைத்த நடிகர் விஜய் அவர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இன்று அவருடைய டுவிட்டர் தளத்தில் வெளியாகி உலக அளவில் டிரெண்ட் ஆகி உள்ளது
இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் ரசிகர்களை விஜய் வேனில் ஏறி சந்தித்தார். நேற்றைவிட இன்று இருமடங்கு ரசிகர்களின் கூட்டம் அதிகம் இருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் கூடுதலாக போடப்பட்டிருந்தது. இருப்பினும் ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் முடியவில்லை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஆனால் இன்று போலீசார் தடியடி எதுவும் நடத்தவில்லை, தடியடி நடத்தினாலும் விபரீதம் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் விஜய் வேனில் ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்தார். ரசிகர்கள் அனைவரும் தங்கள் மொபைல் போனில் உள்ள லைட்டை ஆன் செய்து விஜய் நோக்கி காண்பித்தது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்த்ததை ஞாபகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களிலும் நெய்வேலியில் ரசிகர்கள் தெறிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் வாழ்த்துக்களை விண்னைபிளக்கும் கரகோஷங்களை மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் தளபதி... pic.twitter.com/0OYHPnpkhM
— M Abbas (@AbbassMf) February 10, 2020