தல அஜித் ரசிகர்களுக்காக மதுமிதா செய்தது என்ன தெரியுமா?

38f8e56d9ee62aefbcb289fa3f165b21

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான கஸ்தூரி அஜித் ரசிகர்களுடன் கடந்த 2 நாட்களுக்கு மேல் மோதி கொண்டிருக்கும் நிலையில் அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா அஜித் ரசிகர்களுக்காக ஒரு ஒரு சிறப்பான விஷயத்தை செய்துள்ளது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது

அஜித் நற்பணி இயக்கத்தினர் அஜித் படம் போட்ட 2020ஆம் ஆண்டு காலண்டரை இன்று வெளியிட்டுள்ளனர். இந்த காலண்டர்களை மதுமிதா மற்றும் அவரது கணவர் மோசஸ் ஆகியோர் இணைந்து அஜித் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

தல ரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு அஜித் நற்பணி மன்றத்திற்கு தான் நன்றி சொல்லிக் கொள்வதாக மதுமிதா கூறியுள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கஸ்தூரியும் மதுமிதாவும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதும் அதே நேரத்தில் அஜித் ரசிகர்களுடன் மதுமிதா அரவணைப்பாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles
Next Story
Share it