’தர்பார்’ படம் பார்த்த முக ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் பார்த்ததாகவும், அந்த படம் நன்றாக இருந்தது என்று கூறியதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் 

திமுக-காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்துள்ளதை அடுத்து இரு தலைவர்களும் இன்று பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கூட்டணியை இணைக்க முயற்சித்தனர் இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வந்த கே எஸ் அழகிரி அவர்கள் திமுக தலைவரை நேரில் சந்தித்தார் 

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் அப்போது ’தர்பார்’ படத்தை முக ஸ்டாலின் அவர்கள் பார்த்து படம் நன்றாக இருந்ததாக தன்னிடம் கூறியதாக கே எஸ் அழகிரி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

மேலும் துக்ளக் விழாவில் ரஜினி பேசியது குறித்து கருத்து கூறிய கே.எஸ்.அழகிரி அவர்கள் முரசொலியையும் துக்ளக்கையும் ஒப்பிட்டு ரஜினி பேசியது தவறுதான் என்றும் இருப்பினும் அவர் வாய்தவறி பேசியிருப்பார் என்றும் அடிப்படையில் அவர் நல்லவர் என்றும் கேஎஸ் அழகிரி தெரிவித்தார்

Published by
adminram