நீண்ட வருடங்களுக்கு பின் தர்பார் திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார் ரஜினி. முருகதாஸ் மற்றும் ரஜினி முதன் முறையாக இணைந்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. எனவே, பலரும் குடும்பம் குடும்பமாக இப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்தனர்.
கலவையான விமர்சனத்தை இப்படம் பெற்றிருந்தாலும், நல்ல வசூலை பெற்றுள்ளது. கடந்த ஞாயிறு வரை சென்னையில் மட்டும் இப்படம் ரூ.14.62 கோடியை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் ரூ.141 கோடியும் மொத்தமாக தர்பார் திரைப்படம் ரூ.300 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…