மேலும், பெரும்பாலான பிரபலங்கள் இந்த நேரத்தை ரசிகர்களுடன் செலவிடுவது, வீட்டு வேலை செய்வது, தோட்ட வேலை செய்வது , சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தொடர்ந்து தங்கைகளை ஈடுபடுத்தி ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.
ஆனால், நடிகர் ரஜினிகாந்த் இந்த கொரோனா ஊரடங்கில் மோடியின் வேண்டுகோளின் படி விளக்கு ஏற்றியது. மற்றும் விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்தது என வெகு சிலவற்றில் மட்டும் தோன்றினார். இந்நிலையில் நேற்று மதியம் போயஸ் கார்டன் வீட்டிலிருந்து மாஸ்க் அணிந்துகொண்டு லம்போர்கினி கார் ஓட்டிச்சென்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சூப்பர் வைரலானது.
ரஜினி இந்த லாக்டவுனில் ட்ரைவர் கூட வைக்காமல் அப்படி முக்கியமான வேலைக்காக வெளியில் சென்றிருப்பார் என யூகித்து கொண்டிருந்தக நேரத்தில் இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. ஆம், ரஜினி ஒவ்வொரு ஆடி அமாவசை தினத்தன்று தனது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளார். அதனை இந்த ஆண்டு நேற்றைய தினம் அதை முறையாக செய்துள்ளார். மேலும், முன்னோர்களின் ஆசியுடன் அரசியல் பரபரப்பாக களமிறங்குவார் என பேசப்படுகிறது.
Good bad…
தனுஷ், நயன்தாரா…
Good bad…
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…