More

3 தீபாவளிகள் கடந்து வெற்றிகரமாக ஓடிய படம் எது தெரியுமா?

தற்போதைய படங்கள் 25 நாள்கள் ஓடினாலே பெரிய ஹிட் என்கிறார்கள் ரசிகர்கள். 100 நாள்கள், 175 நாள்கள,; 1 வருடம் ஓடிய படங்கள் உண்டு. ஆனால், தமிழ் திரை உலகில் தொடர்ச்சியாக 3 தீபாவளிகள் கடந்து வெற்றிகரமாக ஓடிய படம் எது தெரியுமா? அப்படி ஒரு படம் இருக்கவே முடியாது என்று சத்தியம் செய்வார்கள். உண்மை தான். அதுதான் ஹரிதாஸ். இப்படத்தின் கதாநாயகன் தான் தமிழ்சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜபாகவதர். 1944ம் ஆண்டு வெளியானது. பாகவதருடன் ராஜகுமாரி நடித்த இப்படத்தை சுந்தர்ராவ் நாட்கர்னி இயக்கினார். 

Advertising
Advertising

804 நாள்கள் ஓடிய சந்திரமுகி

ரஜனிகாந்த், ஜோதிகா நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 804நாள்கள் ஓடி சாதனை படைத்தது. விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் படம் படு ஸ்பீடாக போகும். இந்தப்படம் திகில் படமாகவும், நகைச்சுவை கலந்தும் வாசு எடுத்திருப்பார். ஜோதிகா சந்திரமுகியாக நடிக்கும் கிளைமாக்ஸ் சீன் பார்க்கும் போது தியேட்டரே மிரண்டு போகும்…அவ்ளோ நடிப்பு நடிச்சிருப்பாங்க…நம்ம ஜோதிகா…வடிவேலு தனக்கே உரிய பாணியில் பேய்க்கு பயந்து பயந்து சந்திமுகி மாளிகைக்குள் போகும் போது வயிறு குலுங்க சிரிக்கலாம். பாடல்கள் அத்தனையும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம். இசையை வித்தியாசாகர் அமைத்திருப்பார். பல்லேலக்கா ….பல்லேலக்கா பாடல் ரஜினியின் ஓபனிங் சாங்…வழக்கம் போல தியேட்டர் அதிருகிறது. கூடவே பிரபு, வடிவேலு, நயன்தாரா நடித்திருக்கும் மெகா சூப்பர் ஹிட் படம் இது. 

மரோசரித்ரா 

இது பாலசந்தர் இயக்கத்தில் நேரடியாக வந்த தெலுங்கு படம் இது. கமல், சரிதா நடிப்பில் உருவான இப்படம் 500 நாள்களைக் கடந்து ஓடிய படம். இனப்பாகுபாடு, ஆதிக்க வர்க்க வேறுபாடு கலந்து காதலைச் சொன்ன படம். தமிழில் பல படங்களைத் தயாரித்த இரா.அரங்கண்ணல் தயாரித்த படம். கமல், சரிதா இருவரும் முதலில் முட்டிக்கொள்வதும், பின்னர் காதலிப்பதும், தொடர்ந்து காதல் தீவிரமாகி காவியமாக மாறுவதும் தான் கதை. எம்.எஸ்.வியின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். மே 19, 1978ல் இப்படம் வெளியானது. சென்னை சபையர் திரையரங்கில் தினசரி காலைக்காட்சியாக 500 நாட்கள் ஓடியது. பெங்களுரில் 600 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் கமல் சொந்தக்குரலில் தெலுங்கு பேசி நடித்திருப்பார்.

425 நாள்கள்

ராமராஜன், கனகா நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படத்தை கங்கை அமரன் இயக்கினார். இப்படம் திரையரங்குகளில் 425 நாள்களைக் கடந்து ஓடியது. இப்படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடி பிரபலமாக இருக்கும். குடகு மலைக் காற்றினிலே பாட்டு கேட்குதா, மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு போன்ற பாடல்கள் அத்தனையும் மனதுக்கு இதமாக இருக்கும்.  

500நாள்கள் 

1984ல் வெளிவந்த கே.விஜயன் இயக்கத்தில் மோகன், சுஹாசினி நடித்த படம் விதி. இந்த படம் திரையரங்குகளில் 500 நாள்களுக்கும் மேல் ஓடி சாதனை புரிந்தது.

ஒரு வருடம் ஓடிய படங்கள்

     பாரதிராஜா இயக்கத்தில் சுதாகர், ராதிகா நடிப்பில் 1978ல் வெளியான படம். இந்த படம் ஒரு வருடத்தைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. அதேபோல் 1980ல் வெளியான டி.ராஜேந்தர் இயக்கிய படம் ஒருதலை ராகம். இதில் சங்கர், உஷா ராஜேந்தர் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் 1வருடத்தைக் கடந்து ஓடி சாதனை புரிந்தது. 1980ல் வெளியான நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் மோகன், சுஹாசினி நடித்திருந்தனர். ஜெ.மகேந்திரன் இயக்கிய இப்படமும் 1 வருடத்திற்கும் மேலாக ஓடியது. 1982ல் வெளியான படம் மூன்றாம் பிறை. கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இப்படத்தை பாலுமகேந்திரா இயக்கினார். இப்படம் திரையரங்குகளில் ஒரு ஆண்டுக்கும் மேல் ஓடியது. சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை கமலுக்கு பெற்றுத் தந்த முதல் படம் இது. 

     1982ல் வெளியான படம் பயணங்கள் முடிவதில்லை. மோகன், பூர்ணிமா ஜெயராம் நடித்த இப்படத்தை ஆர்.சுந்தரராஜன் இயக்கினார். தேன் தடவிய பாடல்களைக் கொண்ட இப்படம் 1 வருடத்தைக் கடந்து ஓடியது. 1991-ல் பிரபு, குஷ்பூ நடிப்பில் வெளியான சின்னத்தம்பி படத்தை பி.வாசு இயக்கினார். இந்த படம் திரையரங்குகளில் 1 வருடத்தைக் கடந்து ஓடியது. 1995ல் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் பாட்ஷா. ரஜினிகாந்த், நக்மா, ஜனகராஜ், ரகுவரன் நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் ஒரு வருடத்தைக் கடந்து ஓடி சக்கை போடு போட்டது.

கில்லி 370 நாள்களும்,பருத்திவீரன் 380 நாள்களும், துப்பாக்கி 300 நாள்களும், தெறி ஒரு வருடமும் ஓடி சாதனை படைதத்து குறிப்பிடத்தக்கது. 

250 நாள்கள் 

   1996ல் விக்ரமன் இயக்கத்தில் விஜய், சங்கீதா நடிப்பில் வெளியான படம் பூவே உனக்காக. இப்படம் திரையரங்குகளில் 250 நாள்களைக் கடந்து ஓடியது. 1996ல் வெளியான படம் காதல் கோட்டை. அகத்தியன் இயக்கத்தில் அஜீத்குமார், தேவயாணி நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் 280 நாள்களைக் கடந்து ஓடியது. 1999ல் வெளியான படம் வாலி. அஜீத், சிம்ரன் நடித்த இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கினார். இப்படம் 270 நாள்களுக்கும் மேல் ஓடியது. 

200 நாள்கள் 

   1997ல் பாசில் இயக்கத்தில் வெளியான படம் காதலுக்கு மரியாதை. இதில் விஜய், ஷாலினி நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் 210 நாள்களுக்கும் மேல் ஓடியது.  வானத்தைப் போல 200 நாள்களும்,  தூள் 200 நாள்களும்; ஓடி சாதனை படைத்தது. 

Published by
adminram

Recent Posts