ஒரே படத்திற்காக பைக், காரை அஜித்திடம் பரிசாக பெற்ற இயக்குனர் யார் தெரியுமா?

Published on: January 24, 2020
---Advertisement---

6606f9550cad063c9687b21d5fa591bc

ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த படத்தின் இயக்குனருக்கு அந்த படத்தின் நாயகன் அல்லது தயாரிப்பாளர் கார் வாங்கிக் கொடுப்பது என்பது தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிகழ்வாக உள்ளது. இந்த நிலையில் ஒரு திரைப்படத்திற்காக அஜித்திடமிருந்து பைக் மற்றும் கார் இரண்டையும் பரிசாக பெற்றதாக பிரபல இயக்குனர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய திரைப்படம் ’வாலி’. இந்த படத்தில்தான் அஜித் முதன் முதலாக இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் என்பதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா இந்தப் படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, ‘நான் அஜித் அவர்களை முதன் முதலாக சந்தித்து வாலி படத்தின் கதையை கூறியபோது படத்தின் கதை அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டதால் கதையைக் கேட்ட உடனே அவர் எனக்கு ஒரு பைக்கை பரிசாக கொடுத்தார். அதன்பின்னர் படப்பிடிப்பை முடித்துவிட்டு பர்ஸ்ட் காப்பியை அவருக்கு போட்டுக் காட்டியபோது என்னை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறியதோடு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். ஒரே படத்திற்காக அஜித்திடமிருந்து பைக், கார் இரண்டையும் பரிசாக பெற்ற இயக்குனர் நான் ஒருவன் மட்டுமே என்பதை பெருமையாக கூறிக் கொள்கிறேன்’ என்று எஸ்ஜே சூர்யாஅந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த தகவல் தமிழ் சினிமா உலகிற்கு உண்மையிலேயே புது தகவல் தான் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment