பிளாஷ் பேக்: வீரா படத்துக்கு பின் இளையராஜா ரஜினிக்கு இசையமைக்காதது ஏன் தெரியுமா?
இசைஞானி இளையராஜாவை பற்றி சொல்லித் தெரியவேண்டியது இல்லை. பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். 80,9 இளைஞகளின் காதல் தூது இவரது பாடல்கள்தன். இன்றும் இவரது பாடல்களை வைத்தே பல ரேடியோ நிலையங்கள் பிழைப்பை ஓட்டுகின்றனர். இவரது பாடல்களாலேயே மோகன்,ராமராஜன் போன்ற நடிகர்கள் முன்னணி இடத்தை பிடித்தனர்.

இளையராஜா இசையில் ரஜினி படம் என்றாலே பாடல்கள் தூக்கலாக இருக்கும். மெலடியாகட்டும், குத்து பாடல்களாகட்டும் இருவரது காம்போவும் வேற லெவல்தான். இளையராஜா ரஜினிக்கு வீரா படத்திற்கு இறுதியாக இசையமைத்திருந்தார். பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட். படமும் சூப்பர்ஹிட். ஆனால் இந்த ஜோடிக்கு இதுதான் இறுதிப்படம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ரஜினி வீரா படத்திற்கு பின் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனத்திற்காக பாட்ஷா படத்திற்காக ஒப்பந்தம் ஆனார். அப்படத்திற்கு இசையை இளையராஜாதான் செய்ய வேண்டும் என்று ரஜினி விரும்பினார்.

இது குறித்து இளையராஜாவிடமும் பேசப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ பாட்ஷா படவாய்ப்பை மறுத்தார். வேறு வழியில்லாமல் என்ன செய்யலாம் என நிறுவனமும் படக்குழுவும் யோசித்தனர்.
இதனை அறிந்த ரஜினி, இளையராஜாவை நேரில் சந்தித்து பாட்ஷா படத்திற்கு இசையமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். பொதுவாக ரஜினி எந்த கலைஞர்களிடம் நேரில் சென்று கோரிக்கை விடுக்க மாட்டார். ஆனால் இளையராஜா விசயத்தில் நேரில் சென்று பேசினார். காரணம் பாட்ஷாவிற்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமே.

ஆனால் இளையராஜா தனது பிடிவாததை விடவில்லை. இந்த படத்திற்கு நான் இசையமைக்க மாட்டேன் என்று கறாராக கூறினாராம். இதன் பின்னரே தேவா இப்படத்திற்கு ஒப்பந்தம் ஆனார். பாடல்களும் சூப்பர்ஹிட அடித்ததோடு படமும் சூப்பர்ஹிட் ஆனது.
இந்த படத்திற்கு பின் ரஜினி அவரது படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று கூறியது இல்லையாம்,ஆனால் இன்றும் இளையராஜாவுடன் நல்ல நட்பில் உள்ளார்.