அந்த இயக்குனர் படத்தில் ஏன் நடித்தேன் தெரியுமா? - விஜய் சேதுபதி விளக்கம்

by adminram |

b6fe15d13f1ff73342c8e1433eb75458

தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்து வருபவர். அவர் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. சமீபத்தில் துக்ளக் தர்பார், லாபம் ஆகிய படங்கள் வெளியானது. அனபெல்லா சேதுபதி நேற்று ஓடிடியில் வெளியானது. ஹீரோவாக மட்டும் நடிப்பேன் என்றில்லாமல் கெஸ்ட் ரோல், வில்லன் வேடம் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

3a6aa12e37aa9f3fc2ad50ca5bcb53be-3

மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் அவர் நடித்துள்ளார். இது படத்தின் வியாபாரத்திற்காகவா? எத்தனை நாட்கள் நடித்திருப்பார்? என பல கேள்விகள் எழுந்தது. தற்போது இதற்கு அவரே பதில் கூறியுள்ளார்.

7468dedb1332eba340b61f581bfac0c2

சைக்கோ படம் பார்த்தேன். மிஷ்கினின் உழைப்பு பிடித்திருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் கதை சொல்லியிருந்தார். ஒரு நாள் போனில் அழைத்து பேசினேன். நேரில் வாங்க பேசலாம் என்றார். 8 மணி நேரம் அவரிடம் பேசிய பின்புதான் அவரை பற்றி தெரிந்து கொண்டேன். பிசாசு 2 கதையை என்னிடம் கூறினார். அழகாக இருந்தது. எனக்கு எதாவது கொடுங்க 2 நாட்கள் நடித்து தருகிறேன் என நானே கேட்டேன். அப்படித்தான் பிசாசு 2 படத்தில் நடித்தேன் என அவர் கூறியுள்ளார்.

5a6181ee6d15bc668d1002654aa47006-2

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story