வினியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பல முகங்களை கொண்டவர் நடிகர் ராஜ்கிரண். என் ராசாவின் மனசிலே படம் மூலம் நடிகராக மாறினார்.அதன்பின் அரண்மனைக்கிளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அதன்பின் குணச்சித்திர நடிகரா மாறினார். குறிப்பாக விஷாலுக்கு அப்பாவாக இவர் நடித்த சண்டக்கோழி திரைப்படம் மூலம் அவருக்கு கிடைத்த இமேஜ் தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் ரசிகர் மத்தியில் வேறு லெவலுக்கு உயர்த்தியது. அதன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கோடிகளை கொட்டிக்கொடுத்தாலும் தனக்கு விருப்பமில்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மறுப்பவர் என்பது இவர் ஸ்பெஷல்.
இன்று ஆசிரியர் தினம் என்பதால் தான் படிக்கும் காலத்தில் தனக்கு வகுப்பெடுத்த பள்ளி ஆசிரியர்களை அவர் நினைவு கூர்ந்துள்ளார். 11ம் வகுப்பு வரை தனக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களின் பெயர்களை தனது முகநூல் பக்கத்தில் வரிசைப்படுத்தி அவர் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Sun TV:…
சூர்யாவின் இப்படிப்பட்ட…
இசைஞானி இளையராஜா…
Serial TRP:…
மகிழ்திருமேனியின் இயக்கத்தில்…