இந்தியாவை சேர்ந்த ரூபா பைரபகா அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மகாணத்தின் ‘ஹெப்சியா நடுநிலைப்பள்ளியில்’ ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அங்கு மாணவர்களுக்கு அவர் இயற்பியல் மற்றும் சமூக ஆய்வு பாடங்களை நடத்தி வந்தார்.
இந்நிலையில், 13 வயது மாணவருடன் அவருக்கு தவறான உறவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தன்னுடைய நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் அந்த சிறுவனுக்கு அனுப்பியுள்ளார். சிறுவனும் அடிக்கடி அந்த ஆசிரியை தங்கி இருந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளான். இதை அறிந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அமெரிக்க சட்டப்படி 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களிடம் நெருக்கமான உறவு வைத்திருப்பது பாலியல் குற்றமாகவே கருதப்படும். எனவே, ரூபாவை போலீசார் கைது செய்துள்ளனர். ரூபாவிற்கு இன்னும் அமெரிக்க குடியுரிமை கிடைக்கவில்லை. எனவே, அவர் 27,700 அமெரிக்க டாலர் கொடுத்து ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அப்படியே வெளியே வந்தாலும் அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…
தமிழ் சினிமாவில்…
நாம் எதேச்சையாக…