
ஹாரு ரிப்போர்ட்ஸ் இந்தியா மற்றும் ஐ.ஐ.எப்.எல் பத்திரிக்கைகள் இணைந்து இந்திய அளவில் பணக்காரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் இந்திய அளவில் 43 இடத்தை பிடித்துள்ளார்.

அதேநேரம் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.19,100 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டுமே 62 சதவீதத்தை இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.